முசிறி நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் திருமண ஜோடி தஞ்சம்

முசிறி நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் திருமண ஜோடி தஞ்சம்

திருச்சி மாவட்டம், முசிறி அருகே பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் வினித் (22) பட்டதாரி. முசிறி அருகே உள்ள முத்தையநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷர்மிளா (24) பட்டதாரி. இருவரும் கல்லூரிக்கு செல்லும் போது பேருந்தில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த 28ஆம் தேதி துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் மாரியம்மன் கோயிலில் வினித் சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டு உறவினர் வீட்டில் இருந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று துறையூர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர். நீதிமன்ற நடுவர் இருவரும் காணாமல் போனது பற்றி புகார் பெறப்பட்டுள்ள காவல் நிலையத்தில் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையடுத்து புதுமண ஜோடிகளை போலீசார் முசிறி குற்றவியல் நடுவர் முன்பாக ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்ற வளாகத்திற்கு பெண்ணின் உறவினர்கள் வந்து திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வாணி மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கதிரேசன் ஆகியோர் புதுமணத் தம்பதிகளை போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் இருந்து முசிறி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று உரிய விசாரணை மேற்கொண்டு பாதுகாப்பு அளித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision