திருச்சியில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல் வேன் டிரைவர் தலை மறைவு

திருச்சியில் ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் 2 வருடமாக பாலியல் அத்துமீறல் - வேன் டிரைவர் தலைமறைவு.திருச்சி திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரசாக். இவரது மகன் முகமது அலி (37). இவர் பள்ளி வேன் டிரைவராக உள்ளார்.இந்நிலையில் பெல் வளாகத்தில் உள்ள பள்ளியில் மாணவிகளை வேனில் அழைத்துச் செல்லும் போது அந்தப் பள்ளியில் படிக்கக்கூடிய 11-ம் வகுப்பு மாணவி
ஒருவரிடம் நெருங்கி பழகியுள்ளார், மேலும் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசை கூறி மாணவியிடம் கடந்த 2 ஆண்டு காக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த விபரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். மேலும் ஜமாத் பெரியவர்களை வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது முகமது அலியை கண்டித்ததோடு மாணவியிடம் பழகுவதை தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.
ஆனால் முகமது அலி தொடர்ந்து அந்த மாணவியிடம் பழகி அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததால் மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முகமது அலி மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். இதனிடையே தலைமறைவான முகமது அலியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision