புதிய வீடு கட்ட மூன்று மடங்கு உயர்ந்த அனுமதி கட்டணத்தை வாபஸ் வாங்க அறிக்கை

திருச்சி மாநகராட்சி புதிதாக வீடு கட்ட அனுமதி கட்டணம் மூன்று மடங்கு உயர்வு வாபஸ் வாங்க சி பி எம் அறிக்கை
புதிதாக வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதியை ஒற்றை சாரளமுறையில் இனையவழி (ஆன்லைன் ) மூலமாக பலவிதமான கட்டணங்களை ஒன்றினைத்து கட் டிட அனுமதி வழங்கும் தமிழக அரசின் புதிய முறையால் திடீரென மூன்று மடங்கு 300% கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது ஏற்புடையதில்லை
தற்போதய நடைமுறை படி 1488 சதுர அடி கொண்ட இரண்டு தளம் கொண்ட வீட்டிற்கு பெறப்பட்டு வரும் மாநகராட்சிகட்டிட அனுமதி கட்டணம்
1 ) தண்ணீர் தொட்டி வைக்க ரூ 225
2) ஆழ் துளாய் கிணறு அமைக்க ரூ 650
3) விளம்பர பலகை வைக்க ரூ 1500
4) மனை அங்கீகரிக்க ரூ 1625
5) மழை நீர் சேகரிப்பு முன்வைப்பு ரூ 2500
6) கட்டிட உரிமையானை கட்டணம் ரூ7500
7) பொருள் சேகரிப்பு கட்டணம் ரூ4750
8) வைப்புத் தொகை ரூ 10425
9) பாதாள சாக்கடை முன்வைப்புத் தொகை 12,500
மொத்தம் கட்டிட அனுமதி பெற ரூ 41,675 இதுவரையில் நடைமுறையில் இருந்தது
இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்துறை தமிழகத்தில் எல்லா மாநகராட்சிகளுக்கும் ஒரேயடியாக மூன்று மடங்கு உயர்தியதால் மேற்படி திருச்சி மாநகராட்சியில் அனைத்து விதமான கட்டணங்களையும் இனைத்து ஒரே கட்டணமாகதற்போது ஒற்றை சாளர முறையில் இனைய வழிமூலம் (ஆன்லைன் )விண்ணபிக்க சதுர அடிக்கு 84 ரூபாய் 325 சதுர அடி முதல் 3400 சதுர அடி வரைவசூலிக்கப்படுகிறது அவ்வாறு வசூலிக்கும் தொகை உதாரணமாக 1488 சதுர அடி கொண்ட இரண்டு தள வீட்டிற்கு 84X 1,488 என்றால் தற்போதய புதிய கட்டணம் 1,24992 ரூபாயாகும்
எனவே தமிழக அரசு ஏற்கனவே உயர்த்தபட்ட கடுமையான வீட்டுவரி உயர்வு உள்ளிட்ட உயர்வுகளால் அவதிபட்டு வரும் நிலையில் இது போன்று மூன்று மடங்கு உயர்த்தியிருப்பதால் புதிதாக கட்டிடம் கட்டும் ஏழை ,எளிய, நடுத்தர மக்களும், கட்டிடடஒப்பந்ததாரர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவேஒற்றை சாளர முறையில் இனைய வழியில் (ஆன்லை னின் ) 325 சதுர அடி முதல்3500 சதுர அடி வரைரூ 30 பெற்று கொண்டு கட்டிட அனுமதியை வழங்கிட வேண்டும் உயர்த்திய ஒருங்கினைந்தபுதிய கட்டணத்தை வாபஸ் பெறும்படி திருச்சி மாநகராட்சியை தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக் குழுவின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன் பத்திரிக்கை செய்தி கொடுத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision