புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மாநகரம் சத்திரப்பேருந்து நிலையம் புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஜார்ஜ் தலைமையில் 27.02.25 நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சென்னை உள், மதுவிலக்கு மற்றும்
ஆயத்தீர்வை துறை நிபுணர் சரவணக்குமார் போதைப்பொருள் தடுப்பில் மாணவர்களின் பங்கு குறித்தும் மாவட்ட குழந்தை நல குழு உறுப்பினர் பிரபு மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் போதைப்பொருள் பயன்படுத்துவதால் உடல் மன அளவிலான பாதிப்புகள் சமுதாயம் சார்ந்த பிரச்சினைகள் மேலும் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போதைப்பொருள் மறுவாழ்வு மையம் உறையூர் பகுதியில் சன்ரைஸ் நிறுவனத்தின் மூலம் செயல்பட்டு வருகிறது அதன்
செயல்பாடுகள் குளித்தும் போதைப்பொருள் ஒழிப்பில் மாணவர்களின் பங்கு மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து தடுப்பது குறித்து பேசினார்கள். போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision