20 கோடி சொத்தை அபகரிக்க அமைச்சர் டி ஆர் பி ராஜா உறவினர்கள் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் ஐஜி அலுவலகத்தில் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி புகார்

20 கோடி சொத்தை அபகரிக்க அமைச்சர் டி ஆர் பி ராஜா உறவினர்கள் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் ஐஜி அலுவலகத்தில் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி புகார்

ரூ 20 கோடி சொத்தை அபகரிக்க அமைச்சர் டி ஆர் பி ராஜா உறவினர்கள் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக ஐஜி அலுவலகத்தில்உயிருக்கு பாதுகாப்பு வேண்டி புகார் கொடுத்த குடும்பம்.

சிவசுப்பிரமணியன் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். இவர் திருவாரூர் மாவட்டம் கீழத்தெரு, மேலவாசல் பகுதியில் வசித்து வருகிறார்.கடந்த 07.02.2025 அன்று சுமார் மாலை 05.00 மணியளவில் என் சகோதரியின் கணவர் தயாளன் என் வீட்டை அபகரிக்கும் நோக்கத்தில் என் வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்து என்னை அடிக்க பாய்ந்தார். என்னை என் குடும்பத்தோடு எரித்து விடுவதாக மிரட்டி சென்றார்.10.02.2025 ஆம் தேதி இரவு என் வீட்டில் வைத்திருந்த கண்காணிப்பு

கேமராவை அவரும் மற்றொரு நபரும் சேர்ந்து அடித்து சேதப்படுத்தினர். கடந்த 11.02.2025 அன்று காலை தயாளன், மோகனசெல்வம், நாகேந்திரன், வீரபாண்டியன் மற்றும் பன்னீர் மகன் ஆகியோர் என் வீட்டு ஜன்னல்களை

 அடித்து சேதப்படுத்தினர் என் மனைவி அவசர உதவி எண் 100-க்கு அழைத்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மீண்டும் சுமார் காலை 11 மணியளவில் மேற்படி நபர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆயுதங்களுடன் வந்து என் மனைவியையும் என் குழந்தைகளையும் கொல்லப்போறோம் என சொல்லிக் கொண்டே என் வீட்டின் கதவையும் தூணையும் உடைக்க ஆரம்பித்தனர். நான் வாட்ஸ் ஆப் மூலம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அனுப்பினேன். உடனடியாக இன்ஸ்பெக்டர் வந்து பார்வையிட்டார்.வீட்டை உடைத்து சேதப்படுத்தி என் மனைவியையும் குழந்தைகளையும் மிரட்டியதற்கு வீடியோ ஆதாரங்கள் இருந்தும், மன்னார்குடி காவல் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்யவில்லை பிறகு நான் ஆன்லைனில் புகாரளித்தேன். அந்த புகாரில் உள்ளவாறு எந்த சம்பவமும் நடைபெறவில்லை என பொய்யாக காவல் உதவி ஆய்வாளர் வேலாயுதம் முடித்து விட்டார், ஆகையால் இன்று திருச்சி மத்திய மண்டல காவல்துறை அலுவலகத்தில் 

 என் வீட்டை அபகரிக்கும் நோக்கோடு என்னையும் என் குடும்பத்தையும் தாக்க முயன்று, கொலை மிரட்டல் விடுத்து என் வீட்டையும் கண்காணிப்பு கேமராவையும் சேதப்படுத்திய நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு சிவசுப்ரமணியன் தனது குடும்பத்தினருடன் புகார் மனுவை வந்து கொடுத்துள்ளார். எனது மனைவி மகன் மகளுடன் வந்த சிவசுப்பிரமணி செய்தியாளர்களிடம் திருவாரூர் மாவட்ட காவல்துறையினர்நடவடிக்கை எடுக்கவில்லை. தனக்கு நீதி வேண்டும் தொடர்ந்து எனது மனைவி மகன் மகள் உள்ளிட்டோர் வீட்டில் இருக்கும் பொழுது பகல் இரவு நேரங்களில் தாக்குதல் நடத்துவதாகவும் கடப்பாரையை வைத்து உடைப்பதாகவும் சிசிடிவி கேமராக்களை உடைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.

அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொழுது தன்னுடைய 20 கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜாவின் அடியாட்கள் இந்த செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அமைச்சரை நேரடியாக இந்த சம்பவத்தில் குறிப்பிட காரணம் ஏன் என்று கேள்வி எழுப்பிய பொழுது தனது அண்ணன் வழியாக அமைச்சர் டிஆர்பி ராஜா உறவினர் என குறிப்பிட்டார். எனது மனைவி குழந்தைகளை வெட்டிக்கொண்டு எரித்து விடுவதாக மிரட்டி உள்ளனர். தொடர்ந்து இதற்கு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று மத்திய மண்டல ஐஜியை சந்திக்க வந்துள்ளேன். எனக்கு நீதி வேண்டும் என் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என தெரிவித்தார். மேலும் குண்டர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்து என் குழந்தைகள்,மனைவி அனைவரையும் துன்புறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision