டிசம்பர் 3ம் தேதி இலவச மருத்துவ முகாம்

டிசம்பர் 3ம் தேதி இலவச மருத்துவ முகாம்

முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய மாவட்ட மருத்துவ அணி சார்பில் பெட்டவாய்த்தலை மணிக்கூண்டு ஆரம்பம் தொடக்கப்பள்ளியில் டிசம்பர் மூன்றாம் தேதி இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

மருத்துவ முகாமில் திருச்சி மாருதி மருத்துவமனை மருத்துவர்கள்,ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர்கள், பெட்டவாய்த்தலை இளங்கோ மருத்துவமனை மருத்துவர்களும் பொது மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க உள்ளனர்.

இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருச்சி மத்திய மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர் சிவமணி, மத்திய மாவட்ட அமைப்பாளர் டாக்டர் .எஸ் கண்ணன் ஆகிய இருவரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய..... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision