திருச்சியில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து வானில் கரும்புகை பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அச்சம்

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எஸ் ஐ டி கல்லூரி பின்புறம் கணபதி நகரில் உள்ள ஆரோக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் உள்ளது.தீடிரென குடோனில் தீப்பற்றி எரிந்து
பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.ராஜ் பிளாஸ்டிக் குடோனில் உள்ளது. இங்கு பழைய பிளாஸ்டிக்கை தூளாக்கி அதனை மறுசுழற்சி செய்து வருகின்றனர்.இதனால் கணபதி நகர் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. திருச்சி மற்றும் திருவரம்பூர் தீயணைப்பு நிலையங்களில் உள்ள இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்துக் கொண்டுள்ளனர்.
இந்த குடோனில் பழைய இரும்பு பொருட்கள் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளது. தீ பற்றி எரிவதால் அந்த கரும்புகை பல அடி உயரத்திற்கு வானில் சென்று கொண்டிருக்கிறது. கரும்புகை அதிக அளவில் வெளியேறுவதால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகின்றனர். தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்.திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் செல்வோர் வானை நோக்கி செல்லும் கரும் புகையை தங்களது கைபேசிகளில் படம் பிடித்து செல்கின்றனர். ஏராளமான பொதுமக்கள் அங்கே கூடி விட்டனர். காவல்துறையினர் பாதுகாப்பு ஈடுபட்டுள்ளனர். எஸ்.ஐ.டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியில் வந்து கரும்புகள் வெளியேறுவதை மிகுந்த அச்சத்துடன் பார்த்து வருகின்றனர்.
கரும் புகையால் அப்பதியில் உள்ள மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.தீ விபத்துக்கான காரணம் குறித்து அரியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision