நகை கடை ஊழியரை கொலை செய்து ரூபாய் 74 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்த 4 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

நகை கடை ஊழியரை கொலை செய்து ரூபாய் 74 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்த 4 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சி மாநகரில் கடந்த 09.05.2021ந் தேதி பிரனவ் ஜுவல்லரி ஊழியர் மார்ட்டின்
ஜெயராஜ் என்பவர் சென்னையிலிருந்து விற்பனைக்காக சுமார் 1½ கிலோ தங்க நகைகளை சென்னை சென்று பெற்றுக் கொண்டு திருச்சிக்கு புறப்பட்டு வந்தவர் திரும்ப கடைக்கு வரவில்லை என்று நகைக்கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் உறையூர் குற்றப்பிரிவு 
காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இவ்வழக்கை உறையூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் புலன் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு சம்மந்தப்பட்ட எதிரிகளான கார் ஓட்டுனர் பிரசாந்த் என்பவரும் மற்றும் அவரது நண்பர் பிரசாந்த், கிழக்குறிச்சி ஆகியோர் காரில் மார்டின் ஜெயராஜ் உடன் திருச்சிக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது கார் ஓட்டுநர் பிரசாந்த் தனக்கு மார்டின் ஜெயராஜ் மீதுள்ள முன்விரோதம் காரணமாகவும், கடன் பிரச்சனை 
காரணமாகவும், தங்க நகைகளை திருட வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடனும், தனது கூட்டாளிகளை வேறு காரில் வரச் செய்துள்ளனர். 

பின்னர் தொழுதூர் - வேப்பூர் இடையில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் மார்டினைக் கொலை செய்து, உடலை திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் 
அழகியமணவாளம் கிராமத்தில் உள்ள ஒரு திடலில் குழி தோண்டி புதைத்து வைத்திருந்தது புலன் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே இவ்வழக்கை ஆதாய கொலை வழக்காக மாற்றம் செய்து மேற்படி எதிரிகள் தெரிவித்த இடத்தில் வட்டாச்சியர் முன்னிலையில் இறந்தவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. 

மேலும் எதிரிகள் திருடிச்சென்று மறைத்து வைத்திருந்த ரூபாய் 74 இலட்சம் மதிப்புள்ள சுமார் 1½ கிலோ தங்க
நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, இவ்வழக்கில் ஈடுபட்ட எதிரிகள் 7 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேற்படி தங்க நகைகளுக்காக கொலை செய்து தங்க நகைகளைக் கொள்ளையடித்த
வழக்கில் ஈடுப்பட்ட முக்கிய எதிரிகள் திருவானைக்கோவில், தாத்தாச்சாரியார் கார்டன் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (26), திருவெறும்பூர், கீழக்குறிச்சி, தெற்கு தெருவைச் சேர்ந்த பிரசாந்த் (26), அழகியமணவாளம், மண்ணச்சநல்லூர்,  கீழத்தெருவைச் சேர்ந்த பிரவீன்ராஜ், (20) மற்றும் அரவிந்த் (23) ஆகிய 4 பேரும் குற்ற
செயல்களில் ஈடுபடும் எண்ணம் கொண்டுள்ளவர்கள் என்பதாலும் பொதுமக்களுக்கும், பொது 
அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவார்கள் என உறையூர் குற்றப்பிரிவு 
ஆய்வாளர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேற்படி எதிரிகள் குற்ற செயலில் ஈடுபடாமல் தடுக்க குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உறையூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் செய்த பரிந்துரையின்படி திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அவ்வாணையின்படி மேற்படி 
எதிரிகள் 4 நபர்களும் இன்று திருச்சி மத்திய சிறையில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ஒரு வருட காலத்திற்கு சிறையில் அடைக்கப்பட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn