அறிவிப்பின்றி கொட்டப்பட்டிருந்த செம்மண் இருசக்கர வாகனத்தில் வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் விபத்தில்பலி

சாலையின் நடுவே பராமரிப்பிற்கு எந்த ஒரு முன்னறிவிப்பு இல்லாமல் கொட்டப்பட்ட செம்மண்- இருசக்கர வாகனத்தில் வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பலிபுதுக்கோட்டை மாவட்டம் நாச்சிகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆல்பட் இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உடன் நாச்சிகுறிச்சி பகுதியில் வசித்துவருகிறார்
வெளிநாட்டில் வேலை பார்த்த இவர் தற்போது வெளிநாடு செல்லாமல் சொந்த ஊரிலேயே இருந்து பணியாற்றி வருகிறார் என கூறப்படுகிறது.இந்நிலையில் இவர் மாத்தூர் பகுதியில் பணிக்காக வந்துள்ளார் தொடர்ந்து பணியை முடித்துவிட்டு இரவு 9 மணி அளவில் விராலிமலை கீரனூர் சாலையில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்த போது அந்தப் பகுதி தார்சாலையின் நடுவே எந்த முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் சாலை பராமரிப்பிற்காக செம்மண் கொட்டப்பட்டு இருந்துஉள்ளது, மலை போல உயரத்தில் மண் கொட்டப்பட்டது தெரியாமல் செம்மண் மீது சரிந்து இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டு இதில் இருசக்கர வாகனம் ஒட்டி வந்த ஆல்பட்டிற்கு பின் தலையில் அடிபட்டு அதிகரத்தம் வெளியேறி நீண்ட நேரம் உயிருக்கு போராடியுள்ளார்,
இரவு நேரம் என்பதால் அதிக ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்த நிலையில் அந்த பகுதியில் சென்ற ஒருவர் கீழே விழுந்து கிடந்த ஆல்பட்டை பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது, தொடர்ந்து அங்கிருந்தவர்கள் மாத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அத் தகவளின் பேரில் வந்த மாத்தூர் காவல்துறையினர் ஆல்பட்டின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் முதல் கட்ட விசாரணையில் எந்த ஒரு முன்னறிவிப்பு இல்லாமலும் அடையாளப்படுத்தாமலும் சாலை பராமரிப்பு பனிக்கு நெடுஞ்சாலைத்துறையினரால் மண் கொட்டப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது
மேலும் ஒரே நாளில் மூன்று பேர் விபத்தில் சிக்கி உள்ளனர் எனவும் இதில் ஆல்பர்ட் மூன்றாவதாக நடந்த விபத்தில் சம்பவ இடத்திலே பலியாகி உள்ளது தெரியவந்துள்ளது, எவ்வளவோ நவீன காலமாக மாறியும் இது போன்ற அதிகாரிகள் அஜாக்கிரதையால் இளைஞர் உயிர் பறிபோனது அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் உயிர்பலிக்கு பிறகு தற்போது அந்த மண் கொட்டப்பட்ட இடத்தைச் சுற்றி அறிவிப்பு பதாகை மற்றும் சமிக்கைகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision