காது கேளாதோர் நல சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

காது கேளாதோர் நல சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

காது கேளாத மாற்று திறனாளிகளுக்கான மாதாந்திர உதவி தொகையை 1000 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்த வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும். வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு அரசின் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கி தர வேண்டும்.

வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் காது கேளாதோர் நல முன்னேற்ற சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒருபகுதியாக, திருச்சி மாவட்ட காது கேளாதோர் நல முன்னேற்ற சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பதாகைகளை ஏந்தியபடி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி சைகை மொழியில் பேசினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிடுவதற்கு விசில் அடித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLano