போலீசார் உதவியோடு குழந்தையை மீட்ட பெண்

போலீசார் உதவியோடு குழந்தையை மீட்ட பெண்

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கியிருந்த திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சேர்ந்த ஞானராஜ் என்பவரது மகன் மைக்கேல் ராஜ் (32). இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார் அப்போது கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தெம்புரை சேர்ந்த சுதாமணி (27) என்பவரும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பொழுது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இருவரும் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணங்களால் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் மைக்கேல் ராஜ் அவரது சொந்த ஊருக்கு சென்று வேலை செய்து வந்தார் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மைக்கேல் ராஜாவுக்கு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்த போது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மைக்கேல் ராஜா மனைவி சுதாமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கையில் வைத்து இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டு சுதாமணியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது,

பின்னர் மைக்கேல் ராஜ் சுதாமணி கையில் வைத்திருந்த அவரது குழந்தையை பிடிங்கிக் கொண்டு அவரது சொந்த ஊர் திருநெல்வேலிக்கு கொண்டு செல்வதாக கூறி புதுக்கோட்டையை சேர்ந்த காதலியுடன் சமயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கியிருந்து வந்துள்ளார்.

குழந்தையின் தாயார் சுதாமணி அக்கம் பக்கத்தில் மற்றும் உறவினர். பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் குழந்தை கிடைக்காத நிலையில், அவரது கணவர் மைக்கேல் ராஜுவிற்கும் செல்போனில் தொடர்பு கொண்ட போது அழைப்பு துண்டிக்கப்பட்டதால் பதறிப்போன தாய் சுதாமணி உறவினர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த போது மைக்கேல் ராஜ் குழந்தையை வைத்திருப்பதை கண்டு சுதாமணியிடம் தகவல் தெரிவித்தனர். சுதாமணி மற்றும் அவரது உறவினர்கள் சமயபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் தங்கி இருந்த மைக்கேல் ராஜுவை பிடித்து அவரது குழந்தையை மீட்டு தாய் சுதாமணியிடம் ஒப்படைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision