துவாக்குடிமலை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் -மாவட்ட ஆட்சியர் தகவல்

துவாக்குடிமலை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் -மாவட்ட ஆட்சியர் தகவல்

 திருச்சி மாவட்டம் துவாக்குடிமலை, அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2022-2023 கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு பட்டயப்படிப்பு (முழுநேரம், பகுதி நேரம்) மற்றும் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு 23.06.2022 முதல் 08.07.2022 வரை இணையதளம் சிவில், மெக்கானிக்கல், மின்னியல் மற்றும் (Online) மூலம் நடைபெறுகிறது. இங்கு சிவில், மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், கணினியியல் மற்றும் சர்க்கரை தொழில்நுட்பவியல் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.

மேலும் இக்கல்வியாண்டு முதல் அரசு வேலைவாய்ப்பு பெற ஏதுவாக சிவில் (தமிழ் வழி), மெக்கானிக்கல் (தமிழ் வழி) ஆகியளையும் புதிய தொழல்நுட்பம் மூலம் வேலை வாய்ப்பை அதிகப்படுத்திட மெக்கானிக்கல் (CAD) என்ற புதிய பாடப்பிரிவும் இக்கல்லூரியில் துவங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் 10-ம் வருப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வியில் நேர்ச்சி பெற்றிருந்தால் முதனமாண்டு பட்டயப் படிப்புக்கு விளைப்பிக்கணம். பருதிநேரத்திற்கு 10, +2,  ITI/10 +2 Yrs Experience பெற்றிருக்க வேண்டும். நேரடி இரண்டாமாண்டிற்கு +2/TT1 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

இதற்கான விண்ணப்பத்தினை https://www.tnpoly.inஎன்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை 23.06.2022 முதல் 08.07.2022 வரை பதிவு செய்யலாம். பதிவு கட்டணம்: பதிவுக் கட்டணமாக ரூ.150/-ஐ விண்ணப்பதாரர் Debit Card/ Credit Card/Net Banking இணையதள வாயிலாக செலுத்தலாம்.

SC/ST பிரியினர் பதிவுக் கட்டணம் செலுத்த அவசியமில்லை. 10-ஆம் வகுப்பு /12-ஆம் வகுப்பு: /ITI மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், சிறப்பு பிரிவினர் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பதாரர் புகைப்படம் ஆகியவை தேவையான அளவுகளில் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்,

மேலும் விபரங்களுக்கு : அலுவலக தொலைபேசி எண்.: 0431-2552226. முதலாமாண்டு சேர்க்கைக்கு : 9443694964, 9843863477, 9751314711 நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கு: 9976483718, 9443544615 மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO