திருச்சி ரெயில் சேவையில் மாற்றம்

திருச்சி ரெயில் சேவையில் மாற்றம்

திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்..... திருச்சி மற்றும் மதுரை ரெயில்வே கோட்டங்களில் ரெயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதையொட்டி ரெயில்களின் நேரம் மாற்றம், பகுதி வாரியாக ரத்து போன்ற மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வண்டி எண் : 06888 காரைக்குடி - திருச்சி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் காரைக்குடியில் இருந்து காலை 9:40 மணிக்கு புறப்பட்டு திருச்சி வரை இயங்கும் இந்த ரெயில் குமாரமங்கலம் திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது.

இந்த மாற்றம் வருகிற 7, 14, 21 மற்றும் 28-ந் தேதிகளில் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision