வெள்ளக்காடான மாநகர சாலை - நடைமேடையில் செல்லும் வாகன ஓட்டிகள்
திருச்சி காஜாமலை நகர் நுகர்பொருள் வாணிப சேமிப்பு கிடங்கு அருகே சாலை முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளது. வாகன ஓட்டிகள் அச்சாலையை பயன்படுத்த முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலையில் பயணிக்க முடியாத நிலை உள்ளது. இதற்கு காரணம் பாதாள சாக்கடைக்காக சாலை ஓரமாக சிமெண்டினாலான சிறிய சுவர் போன்று கட்டி வைத்துள்ளதால் மழை நீர் வடிய முடியாமல் சாலை முழுவதும் தேங்கியுள்ளது.
பொதுமக்கள் அந்தச் சாலையில் நடந்து செல்ல வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதசாரிகள் பயன்படுத்தக்கூடிய பாதையில் இரு சக்கர வாகனங்களை வாகன ஓட்டிகள் இயக்கும் காட்சிகளும் அரங்கேறி வருகிறது. மிக முக்கியமாக அந்த பாதசாரிகள் நடக்கும் பாதையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் மற்றும் சிமெண்ட் கட்டைகள் திறந்து உள்ளன.
பொதுமக்கள் யாரும் பாதசாரிகள் பயன்படுத்தும் சாலை இருசக்கர வாகனங்கள் இயக்க வேண்டாம் என மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். பொதுமக்கள் உடனடியாக மழை நீரை வடிய செய்வதற்கான நடவடிக்கையை மாநகராட்சி எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision