திருச்சியில் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி மினி மாரத்தான் ஓட்டம்- மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருச்சியில் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி மினி மாரத்தான் ஓட்டம்- மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

இந்திய திருநாட்டின் 75வது சுதந்திரதின அழுதப் பெருவிழாவையொட்டி நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், திருச்சியில் மினி மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது.

ஆரோக்கிமான தன்னம்பிக்கை உள்ள சமூகத்தை உருவாக்கிட அனைவரும் உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற மாராத்தான் ஓட்டமானது மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள உப்பு சத்தியாகிரக நினைவுதூணிலிருந்து தொடங்கி மன்னார்புரம், டிவிஎஸ்டோல்கேட் வழியாகச் சென்று அண்ணா விளையாட்டரங்கில் நிறைவடைந்தது.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு உப்பு சத்தியாகிரக நினைவுதூண் அருகில் அலங்கரிக்கப்பட்டிருந்த மகாத்மாகாந்தி, ராஜாஜி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் மினி மாராத்தான் ஓட்டத்தினை கொடியசைத்து துவக்கிவைத்து மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடினார், இதில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று ஓடினர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO