பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - அரசு மருத்துவர் மீது குண்டா் சட்டம் - மாநகரக் காவல் ஆணையா் உத்தரவு

பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - அரசு மருத்துவர் மீது குண்டா் சட்டம் - மாநகரக் காவல் ஆணையா் உத்தரவு

திருச்சி மேலப்புதூா் பகுதியில் செயல்படும் ஒரு தொடக்கப் பள்ளியின் விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுக்கு லால்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்த சாம்சன் டேனியல் (31) மருத்துவம் பாா்ப்பது போல வந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகாா் எழுந்தது. 

அதன்பேரில், திருச்சி கோட்டை மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, மருத்துவா் சாம்சன் டேனியலை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய தாயாரும், அப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியருமான கிரேஸ் சகாய ராணியையும் கைது செய்தனா்.

மருத்துவா் சாம்சன்டேனியல் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த நிலையில், அவரை குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என கோட்டை மகளிா் போலீஸாா் பரிந்துரைத்தனா். இதனை பரிசீலித்த காவல் ஆணையா் ந. காமினி, மருத்துவா் சாம்சன் டேனியலை குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளாா்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision