இணைய வழியில் திசைகாட்டும் திருச்சி வேலைவாய்ப்பு முகாம் -அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

இணைய வழியில் திசைகாட்டும் திருச்சி வேலைவாய்ப்பு முகாம் -அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

இன்றைய இளையோருக்கும் கொரானா  காரணத்தால் வேலை இழந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவது என்பது திராவிட முன்னேற்ற கழகத்தின் 2021 தேர்தல் வாக்குறுதி  அறிக்கைகளில் ஒன்று.வாக்குறுதியை நிறைவேற்றும் முயற்சியை தொடர்ந்து திமுக செய்து வருகிறது அதன் அடிப்படையில் திருச்சி இளையோரை மையமாக வைத்து நம்பிக்கையூட்டும் இணையவழி வேலைவாய்ப்பு முகாம் ஒன்றினை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு  தொடங்க திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரானா காலத்தில் நேரடி வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவது கடினம் எனவே இணையவழியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நூற்றுக்கும் மேலான நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 15-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை நடைபெறும்.
ஒவ்வொரு மாதமும் 500 பேருக்கு   வேலைவாய்ப்பு பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்குடன் இந்த வேலைவாய்ப்பு இயக்கத்தை தொடங்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கு மேலான நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க இணைந்துள்ளனர்.முதல் சுற்றில் குறைந்தபட்சம் 2,000 பேருக்கு வேலை உத்தரவு கிடைக்கும் என நம்புகிறோம்.முகாமில்  பங்கேற்ற www.aramhr.com  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
 அல்லது8566992244என்று  எண்ணிற்கு  தொடர்புகொண்டு விண்ணப்பிக்கலாம் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.


நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என ஆண்டு முழுவதும் "திசைகாட்டும் திருச்சி வேலைவாய்ப்பு முகாம்" நடைபெறும் எனவே முதல் சுற்றில் வேலை கிடைக்காதவர்கள் மனச்சோர்வு கொள்ள வேண்டாம்.மிக முக்கியமாக நேர்காணலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சிகளுக்கும் ஒழுங்கு செய்துள்ளன.பயிற்சியில் அக்கறையுடன் பங்கேற்க வேண்டுகிறேன் அடுத்த கட்டமாக ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு பணிகளுக்கான தேர்வு பயிற்சிகளையும் விரைவில் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது .

எல்லோருக்கும் வாழ்வு என்பதே "திசைகாட்டும் திருச்சி" இயக்கத்தின் நோக்கம் எனவே திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழில் வணிக நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று வலுசேர்த்திட வேண்டும் என்றும் மிக முக்கியமாக பொதுநல அமைப்புகளும்தன்னார்வலர்களும் இணைந்து இந்த முயற்சி வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இளையோர்களின் ஒருவர் கூட வேலை இன்றி இருக்கக்கூடாது   என்பதை லட்சியமாகக் கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a