மரக்கன்றுகளோடு நூற்றாண்டு விழா கொண்டாடிய திருச்சி தேசிய கல்லூரி!

மரக்கன்றுகளோடு நூற்றாண்டு விழா கொண்டாடிய திருச்சி தேசிய கல்லூரி!

திருச்சியில் நூற்றாண்டுகளைக் கடந்த பெருமை மிக்க ஒரு கல்லூரி என்றால் அது தேசிய கல்லூரி. 1919 ஆண்டு தொடங்கிய கல்வி பயணம் இன்றளவும் பல மாணவர்களை உருவாக்கி, குறிப்பாக கிராமப்புற மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் அது தேசிய கல்லூரி தான் சேரும். சமீபத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 100 ஆண்டுகள் பழமை மிக்க கல்வி நிறுவனங்களை கூறும்போது தமிழகத்தில் திருச்சி தேசியக் கல்லூரியையும் சுட்டிக்காட்டியது பெருமை மிக்க ஒன்றாகும்.

Advertisement

இந்நிலையில் திருச்சி தேசிய கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் Shine TREEchy அமைப்பினர் சார்பாக திருச்சி இனாம்குளத்தூர் அருகிலுள்ள பெருமாம்பட்டி என்னும் கிராமத்தில் 100 மரக்கன்றுகளை நட்டு நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிகழ்வில் திருச்சி தேசிய கல்லூரி முதல்வர் சுந்தரராமன், திருச்சி தேசிய கல்லூரி துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி, மதன், குணசீலன் மற்றும் Shine TREEchy அமைப்பின் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO