பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய முன்வர வேண்டும் - திருச்சி மாநகர காவல்!

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய முன்வர வேண்டும் - திருச்சி மாநகர காவல்!

பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது. அங்கு நாள் ஒன்றுக்கு 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் பிரிட்டனில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் அச்சத்தால் பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, ஜெர்மன், கனடா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் பிரட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. 

Advertisement

இதனைத் தொடர்ந்து திருச்சி மாநகர காவல் சார்பில் நவம்பர் 25 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை பிரிட்டனில் இருந்து விமானம் மூலமாக தமிழகம் வந்தவர்கள் சுகாதாரத்துறை மூலமாகவோ அல்லது தாமாக முன்வந்து RTPCR கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து அறிய 104 என்ற எண்ணை தொடர்புக்கொள்ளவும். மேலும் விபரங்களுக்கு 99523-87108/ 0431-2418995 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.