இரவு நேர ஊரடங்கு - வெறிச்சோடிய திருச்சி

இரவு நேர ஊரடங்கு - வெறிச்சோடிய திருச்சி

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. திருச்சியை பொறுத்தவரை தினந்தோறும் 300க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

Advertisement

இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாததால் திருச்சி மத்திய பேருந்து நிலையம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

திருச்சியிலிருந்து விழுப்புரம் சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மதியம் 3 மணி வரையும், திண்டுக்கல் செல்லும் பேருந்துகள் இரவு 8 மணி வரையும், மதுரை, தஞ்சாவூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் 8:30 வரையும் இயக்கப்பட்டன. திருச்சியில் இருந்து ஒன்பது மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படாததால் தற்போது திருச்சி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் இரவு நேர ஊரடங்கு அமலாகியதால் வணிக நிறுவனங்கள் கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. காவல்துறையினர் சார்பிலும் திருச்சி மாநகர் முழுவதும் தற்போது முதல் முகக் கவசங்கள் அணியாதவர்கள் மற்றும் வெளியில் வருபவர்களிடம் அபதாரம் விதித்து வருகின்றனர்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu