காருக்குள் அமர்ந்து வரும்பொழுதும் முககவசம் அணிய வேண்டும் என கெடுபிடி காட்டிய எஸ்.ஐ  வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவர் - காட்சிகள் வைரல்

காருக்குள் அமர்ந்து வரும்பொழுதும் முககவசம் அணிய வேண்டும் என கெடுபிடி காட்டிய எஸ்.ஐ  வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவர் - காட்சிகள் வைரல்

திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து முக கவசம் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் மஞ்சத்திடல் பாலம் அருகே திருவெறும்பூர் சட்டம்-ஒழுங்கு உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் போலீசார் முககவசம் அணியாமல் வாகனங்களில் பயணம் செய்பவர்களிடம் அபராதம் வசூலித்து கொண்டிருந்தார்.

 அப்போது காரில் வந்த இருவர் காருக்கு உள்ளே முககவசம் அணிய வில்லை என அவர்களுக்கு அபராதம் விதிக்க முற்பட்டார். காரில் பயணம் செய்து இருவர்களும் உதவி ஆய்வாளர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காருக்கு உள்ளே அமர்ந்திருக்கும் பொழுது நாங்கள் ஏன் முக கவசம் அணிய வேண்டும் ஏன் இப்படி எங்களை தொந்தரவு செய்கிறீர்கள் அவசர தேவையாக இருவர் மட்டுமே காரில் பயணம் செய்து வருகிறோம் என தெரிவித்து  தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உதவி ஆய்வாளரும் விடாமல் அவர்களை அபராதம் கட்ட வேண்டும் என வற்புறுத்தினார்.

எங்களை அரசாங்கம்தான் அபராதம் விதிக்க உத்தரவிட்டு உள்ளது என தெரிவிக்க காரில் வந்த பெண்மணி மேலும் கோபமடைந்து உதவி ஆய்வாளரிடம்  காருக்குள் முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என யார் குறிப்பிட்டு உள்ளார்கள் என கேள்வி எழுப்பினார்.
 ஒருகட்டத்தில் உதவி ஆய்வாளர் உடன் இருவரும் பேசிவிட்டு காரை எடுத்து சென்றுவிட்டனர். தொடர்ந்து உதவி ஆய்வாளர்  வற்புறுத்தி அபராதம் விதிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.இக்காட்சிகள் இப்பொழுது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu