பால்பண்ணை - துவாக்குடி சர்வீஸ் சாலை அமைக்க வேண்டி, அமைச்சருடன் சந்திப்பு -திருச்சி எம்பி

திருச்சி நாடாளுமன்ற தொகுதி, திருச்சி - தஞ்சை சாலையில், பால்பண்ணை - துவாக்குடி சர்வீஸ் சாலை அமைக்க வேண்டி, சென்னை, தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களையும்,
முதல்வரின் முதல் நிலை செயலர் மருத்துவர் பி.உமாநாத் இ. ஆ. ப அவர்களையும் சந்தித்தேன். எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதி, திருச்சி மாநகரில், பால்பண்ணை - துவாக்குடி சர்வீஸ் சாலை அமைக்க வேண்டிய 15 ஆண்டுகால கோரிக்கை, அது குறித்த நீதிமன்ற தீர்ப்புரை, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை பணிகள் குறித்து விவாதித்து, தீர்வை உருவாக்கி, சர்வீஸ் சாலை அமைக்கும் பணியில் முன்னேற்றம் காண்பது தொடர்பாக,
இன்று (29.04.2025) காலை 11 மணியளவில், தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அலுவலகத்தில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்புச் சகோதரர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை, சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பினருடன் சந்தித்தேன்.
அதனைத் தொடர்ந்து அமைச்சருடன், முதல்வரின் முதல் நிலை செயலர், மருத்துவர் பி. உமாநாத் இ. ஆ. ப அவர்களையும் சந்தித்து உரையாடி பல்வேறு கோணத்தில் விவாதித்தோம்.
லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் திருச்சி - தஞ்சை சாலையில் குறிப்பிட்ட பகுதியில் விபத்துகள் ஏற்படாதவாறு சர்வீஸ் சாலை அமைக்க வேண்டிய அப்பகுதி மக்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது என்றும், அவசியம் செய்துதர வேண்டும் என்றும் அமைச்சர் அவர்கள் முதல்வரின் முதல் நிலைச் செயலரிடம் கேட்டுக்கொண்டார்.
அதனை ஏற்று, அடுத்தக்கட்டமாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு, அனைவரும் ஏற்கும் வகையிலும், தேசிய நெடுஞ்சாலை விதிமுறைகளின்படி விரைவில் சர்வீஸ் சாலைக்கான பணிகள் தொடங்கும் என்று வாக்குறுதி அளித்தார்.
காலையில் 11 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பிற்கான இன்றையப் பணி மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. இச்சந்திப்பு திருச்சி தொகுதிக்கு நன்மையாக அமையும் என்று முழுமையாக நம்புகிறேன். வடசென்னை கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் சு. ஜீவன் எம்சி, தென்சென்னை மேற்கு மாவட்டக் கழக செயலாளர் ப. சுப்பிரமணி எம்சி உடன் இருந்தனர். என்று துரை வைகோ அவர்கள் கூறினார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision