பங்குனி உத்திரம் வயலூர் முருகன் கோயிலில் காவடி, பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு

பங்குனி உத்திரம் வயலூர் முருகன் கோயிலில் காவடி, பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு

திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த திருத்தலமான வயலூர் முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் இன்று பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக தொடங்கி நடைபெற்றது. அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி இன்று அதிகாலை முதலே பெருந்திரளான பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடங்கள் எடுத்துவந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.  மேலும் பங்குனிஉத்திர திருநாளில் திருச்சி வயலூர் முருகப்பெருமானை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.

இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் பங்குனி உத்திரத்திருவிழாவானது வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO