திருச்சி மாநகரில் அசுர வேகத்தில் தனியார் பேருந்துகள் - அலறும் பொதுமக்கள்

திருச்சி மாநகரில் அசுர வேகத்தில் தனியார் பேருந்துகள் - அலறும் பொதுமக்கள்

திருச்சி மாநகரில் போட்டி போட்டுக் தனியார் பேருந்துகள் ஓட்டப்படுகின்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் ஒன் ரூட் பேருந்துகள் அதிக வேகத்தில் செல்கின்றன. தனியார் பேருந்துகளுக்குள் போட்டி பயணிகளை யார் முன்னதா பேருந்து நிறுத்தத்தில் சென்று ஏற்றுவது அதிக வசூல் செய்வது என்று ஓட்டுநர்களும் நடத்துனர்களும் போட்டி போட்டுக்கொண்டு இந்த செயலை செய்து வருகின்றனர்.

பயணிகள் ஏறும் வரை நிறுத்தி வைத்து பின்பு ஒரு தனியார் பேருந்து வந்தால் இருவரும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு அடுத்த பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்ற முற்படுவது சாலைகளில் அசுர வேகத்தில் பேருந்துகளை இயக்கி வருகின்றனர் மேலும் தனியார் பேருந்துகளில் இளம் வயது புதிய அனுபவம் இல்லாத ஓட்டுநர்களை வைத்து பேருந்து ஓட்ட வைத்து சாலைகளில் செல்பவர்களையும், வாகன ஓட்டிகளையும் அலற வைக்கின்றனர்.

திருச்சி ரயில்வே ஜங்ஷன் வாசலில் நேற்று முன்தினம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த செந்தில்குமார் (73) என்பவர் சாலையை கடந்து பாதசாரிகள் நடக்கும் பாதையில் நடந்து வந்து பேருந்து ஏற முற்பட்ட பொழுது நேராக அசுர வேகத்தில் வந்த தனியார் பேருந்து மோதி விபத்தில் சிக்கினார். தற்பொழுது அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் இன்று காலை திருச்சி புத்தூர் பகுதியில் 2 தனியார் பேருந்துகள் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இரண்டு பேருந்துகளும் வெவ்வேறு தடங்களில் செல்கிறது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 10க்கும் மேற்பட்டவர்கள் சிறு காயமடைந்தனர். சிக்னலில் குறுக்கே நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் உள்ளே இருந்த பயணிகள் அலறினர். இரண்டு பேருந்தின் கண்ணாடிகளும் நொறுங்கியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாநகரில் தொடர்ந்து தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் இயக்கப்படுவதால் விபத்து தினமும் நடந்து கொண்டிருப்பதாக பயணிகள் குறிப்பிடுகின்றனர். தனியார் பேருந்தில் அமர்ந்து பயணம் மேற்கொள்ளவே அச்சமாக இருப்பதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

விபத்தை ஏற்படுத்தி விட்டு தொடர்ந்து பேருந்து ஓட்டுவது மேலும் சாலையில் செல்பவர்களை ஒரு பொருட்டாக நினைக்காமல் தாறுமாறாக ஓட்டி வாகன ஓட்டிகளை திக்கு முக்காட வைத்து கீழே விழும் அளவுக்கு போட்டி செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளதாக, பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இதற்கு உடனடியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுத்து அதிக வேகத்தில் இயக்கப்படும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision