தமிழ் பாடத்தை தடை செய்யும் பள்ளி - AISF முற்றுகை போராட்டம்

தமிழ் பாடத்தை தடை செய்யும் பள்ளி - AISF முற்றுகை போராட்டம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன வளாகத்தில் ஆர் எஸ் கே பள்ளி மற்றும் பெல் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் ஆர்எஸ்கே பள்ளியை தற்போது டிஏவி எனப்படும் தயானந்த ஆங்கிலவேதிக் பள்ளி 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து பள்ளியை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் பள்ளியில் தமிழ் பாடத்தை தடை செய்யும் போக்கு, இந்தி மொழி திணிப்பு, சிப்ட் முறையில் வகுப்புகள் ஆகியவற்றை கண்டித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்ற திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் கபிலன் தலைமையில் ஆர் எஸ் கே பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்படலாம் என போலீசார் கூறியதையடுத்து, சமரச பேச்சுவார்த்தைக்கு உட்பட்ட போராட்டக்காரர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் ராஜ்குமார், திகா ஒன்றிய தலைவர் மாரியப்பன், தமிழ் தேசிய பேரியக்க நிர்வாகி இலக்குவன், மதிமுக ஒன்றிய செயலாளர் திருமாவளவன் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO