திருச்சி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக முத்தரசு பொறுப்பேற்றுக்கொண்டார்
கோவை மாநகர போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் துணை ஆணையராக இருந்த முத்தரசு திருச்சி மாநகர ( குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு ) துணை ஆணையராக இடமாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து இருந்தது.
அதன்படி இன்று திருச்சி மாநகர துணை ஆணையராக ( குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு ) முத்தரசு பொறுப்பு ஏற்று கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி மாநகர ( சட்டம் ஒழுங்கு பிரிவு ) துணை ஆணையராக சக்திவேல் பொறுப்பு ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve