பாஜக என்பது ஆர் எஸ் எஸ் -ன் அரசியல் கருவி -இந்திய கம்யூனிஸ்ட் கட்சி து.ராஜா பேச்சு

பாஜக என்பது ஆர் எஸ் எஸ் -ன் அரசியல் கருவி -இந்திய கம்யூனிஸ்ட் கட்சி து.ராஜா பேச்சு

அகில இந்திய அளவில் ஜனநாயகத்தை காக்க வேண்டிய வரலாற்று கடமை நம் முன்னாள் இருக்கிறது. ஜனநாயகம் வெல்லும் சர்வாதிகாரம் வெல்லாது வெல்லவும் விட மாட்டோம். மதவாத நாடாக இந்துத்துவ கொள்கை அடிப்படையில் இந்து ராஷ்டிரிய நாடாக இந்தியாவை மாற்ற அம்பேத்கருக்கு பல நெருக்கடிகளை கொடுத்தனர்.

அப்படி ஆக்கினால் அது பேரிடர் என்று கூறி மதசார்பற்ற நாடாகத்தான் இந்தியா இருக்கும் என்றார் அம்பேத்கர் தற்போது அம்பேத்கர் சொன்ன பேரிடரை நமது நாடு சந்தித்து வருகிறது. மதவாத ஆதிக்கத்தை நிலை நிறுத்த பார்க்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி எரிந்து விட்டு மனுசுருமித்தியை வையுங்கள் என்று கூறி அதை செய்ய முயற்சி மேற்கொள்கின்றனர். பாஜக என்பது ஆர்எஸ்எஸ்-ன் அரசியல் கருவி‌.

ஜனநாயகத்தை குழிதொண்டி புதைக்கின்ற வேளையை செய்கின்றனர். நாடாளுமன்றத்தை செயல்பட விடமாடமல் தடுக்கின்றனர். நாடாளுமன்றம் செயல்படவில்லை என்றால் ஜனநாயகம் செத்து போவதற்கு சமம். ஜனநாயகம் வெல்ல அதிகாரத்தில் இருந்து பாஜக அகற்றபட வேண்டும். பாஜக ஆட்சியில் இருக்கும் காலம் முழுவதும் ஜனநாயக இருக்காது. மக்களுக்கு உரிமை இருக்காது. பாசிச பாஜகவுக்கு மாற்று தேவை. அது இந்தியா கூட்டணி தான்.

மதசார்பற்ற மாற்று இந்தியா முழுவதும் தேவைப்படுகிறது. மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியா மூன்றாவது பொருளாதார நாடாக மாறும் என்கிறார். இந்தியா முதல் பொருளாதார நாடாக கூட வரட்டும் ஆனால் நம் மக்கள் நிலை எப்படி இருக்கும். கல்வி சுகாதாரம் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளதா? பாஜக ஒரு புறம் மதவாத ஆட்சி மதவாத அரசியல் கொள்கையை உருவாக்க முயல்கிறது.

மற்றொரு புறம் அதானி அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது.  அரசியல் சட்டத்தை ஜனநாயகத்தை காக்க பாஜக வீழ்த்தபட வேண்டும். ஒன்று பட்டு போராடுவது மூலம் நிச்சயம் ஜனநாயகம் வெல்லும் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision