பார்வைதிறன் குறைபாடுடைய மகளிர் பள்ளி ஏழாவது முறையாக 100 சதவீதம் தேர்ச்சி
திருச்சி பார்வைத்திறன் குறைபாடுடைய மகளிருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 7 ஆவது முறையாக நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனைதிருச்சி மாவட்டத்தில் 13371 மாணவர்களும், 16244 மாணவிகளும் மொத்தம் 29615 மாணவர்கள் +2 தேர்வு எழுதினார்கள். இதில் 12491 மாணவர்களும், 15863 மாணவிகளும் என மொத்தம் 28354 மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்
திருச்சி தேர்ச்சி சதவீதம் 95.74 இது கடந்த ஆண்டு 96.02 சதவீதமாக இருந்தது தற்போது தேர்ச்சி 0.28 சதவீதம் குறைந்து உள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் 82 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளது குறிப்பாக திருச்சி மாநகரம் புத்தூரில் பார்வைத்திறன் குறைபாடுடைய மகளிருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பார்வை குறைபாடு உள்ள பல்வேறு மாவட்டங்களை சார்ந்த பெண்கள் தங்கி கல்விப்பயின்று வருகிறார்கள்.
12ம் வகுப்புகள், கடந்த 1990-91ம் கல்வி ஆண்டில் துவங்கப்பட்டது. அன்று முதல், நடப்பு, 2024ம் கல்வியாண்டு வரை, ஆண்டுதோறும் சிறப்பான முறையில் தேர்ச்சிப் பெற்று வருகின்றனர். குறிப்பாக, கடந்த, 2018ம் ஆண்டு முதல், தற்போது, 2024ம் ஆண்டு வரை, தொடர்ச்சியாக, 100% தேர்ச்சியை பெற்று சாதனை படைத்துள்ளனர். நடப்பு கல்வியாண்டில், 18 மாணவிகள் தேர்வெழுதிய நிலையில், அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision