ஹிந்துஸ்தான் என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சீல்

ஹிந்துஸ்தான் என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சீல்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு 26 குமரன் நகர் சிவன் கோவில் தெரு குடியிருப்பு பகுதியில் மாநகராட்சியின் வணிக உரிமம் பெறாமல் ஹிந்துஸ்தான் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் சோப்பு திரவம், சலவை வேதிப்பொருட்கள் போன்ற அனேக வேதிப்பொருட்களை மொத்தமாக வரவழைத்து, அதனை தேவையான அளவு கண்டைனர்களில் அடைத்து கடைகளுக்கு விநியோகம் செய்யப்படது. 

அந்த நிறுவனத்தின் மீது அருகில் வசிப்போர் மேற்படி வேதிப்பொருள்களின் நெடி தாங்க இயலாமல் உள்ளது என புகார் அளித்ததன் அடிப்படையில், மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி மேற்படி இடம் சுகாதார ஆய்வாளரால் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அங்கு கடும் வேதிப்பொருள்கள் நெடி எழுவதை கண்டறிந்து மேற்படி நிறுவனத்தை குடியிருப்பு பகுதியில் இருந்து அகற்றி அருகில் வசிப்பவர்களுக்கு தொல்லை இல்லாத இடத்தில் மாற்றம் செய்து கொள்ளும்படி பொது சுகாதார அறிவிப்பு வழங்கப்பட்டது. மேற்படி நிறுவனத்தின் உரிமையாளர் அறிவிப்பை பெற்று அதன்படி இணங்கி நடக்கவில்லை. 

இதனை தொடர்ந்து அந்நிறுவன உரிமையாளர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு வேண்டும் என வலியுறுத்தி கடிதம் அளித்ததன் பேரில், மாநகராட்சி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் இணைந்து நேரடி ஆம்வு நடத்தி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் அந்த நிறுவனத்தால் வேதிப்பொருள்கள் நெடி எழுவதும் அது அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் உணர்ந்ததாகவும், மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதியின்றி இத்தொழில் இங்கு நடைபெறுவதாகவும், அருகில் சிவன் கோயில் உள்ளது.

 1939 ஆம் வருட பொது சுகாதார சட்ட விதிகளின்படி மேல் நடவடிக்கை தொடர கடிதம் அளித்ததன் பேரில் மாநகராட்சி ஆணையர் மரு.இரா. வைத்திநாதன் உத்தரவுன்படி மாநகர் நல அலுவலர் மரு.திமணிவண்ணன் உத்திரவின்படியும் இன்று வெள்ளிக்கிழமை (02.02.2024) வட்டாட்சியர் ராஜவேல், கிராம நிர்வாக அலுவலர் ஸ்டீபன் வருவாய் ஆய்வாளர் அசோக் மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் இரா ஆல்பர்ட் மேற்படி நிறுவனத்தை மூடி முத்திரையிட்டனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் தெரிவிக்கையில்.... மாநகராட்சியில் வணிகம் நடத்துபவர்கள் மாநகராட்சி வணிக உரிமம் பெற்றே வணிகம் தொழில் நடத்த வேண்டும் என வலியுறுத்தியினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision