கோடநாடு கொலை வழக்கு திருச்சியில் ஆடியோ பதிவுகளை எடுத்த சிபிசிஐடி - மர்ம முடிச்சு விலகுமா?

கோடநாடு கொலை வழக்கு திருச்சியில் ஆடியோ பதிவுகளை எடுத்த சிபிசிஐடி - மர்ம முடிச்சு விலகுமா?

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இந்த பங்களாவில், கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தது. இது தொடர்பாக சேலத்தை சேர்ந்த கனகராஜ் மற்றும் கேரளாவை சேர்ந்த சயான் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இதற்கிடையே இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்துவிட்டார். இதையடுத்து போலீசார் சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் பல்வேறு தகவல்களை சேகரிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.கொலை தொடர்பாக செல்போன் உரையாடல் அடங்கிய 10 கேசட் திருச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இருந்து எடுக்கப்பட்டு குஜராத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த கேசட்டில் உள்ள தகவல்களை ஆடியோவை கேட்க முடியாத நிலையில் சிபிசிஐடி போலீசார் குஜராத்தில் இருந்து தேசிய தடவியல் பல்கலைக்கழக பேராசிரியர்களை அழைத்துக் கொண்டு வந்து திருச்சி சிங்காரத் தோப்பு அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு ஆய்வுக்கு வந்தனர். மீண்டும் சேகரிப்பதற்காக, குஜராத் மாநிலத்தில் உள்ள தேசிய தடயவியல் ஆய்வக பல்லைக்கழகத்திற்கு பேராசிரியர் உடன் வந்த சிபிசிஏடிஎஸ்பி மற்றும் அதிகாரிகள் பிஎஸ்என்எல் பொது மேலாளர் இடம் கேட்டு நேரடியாக 10 கேசட்டுகளை மீண்டும் நகல் செய்து எடுத்துச் செல்லும் பணியில் இறங்கி உள்ளனர்.

அதில் இருக்கும் தகவல்களை கொண்டு ஆடியோ கேட்க முடிந்தால் கோடநாடு கொள்ளை, கொலை விவகாரம் வெளிச்சத்திற்கு வரும். அதில் உள்ள மர்ம முடிச்சு விரைவில் விலகி உண்மை குற்றவாளிகள் யார் என்பது உலகிற்கு தெரியவரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் சி பி சி ஐ டி போலீசார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision