மணப்பாறை பேருந்து நிலைய குப்பையில் கிடந்த காவலர் தொப்பி

மணப்பாறை பேருந்து நிலைய குப்பையில் கிடந்த காவலர் தொப்பி

திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்துநிலையத்தில் நேற்று இரவு நகராட்சி தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியினை மேற்கொண்டு இருந்தனர். அப்போது பாலக்குறிச்சி பேருந்துகள் நிறுத்தும் பகுதியில் இருந்த குப்பைகளுக்கிடையே காவலர் ஒருவரின் தொப்பி, அரசின் அசோக சின்ன முத்திரையுடன் கிடந்துள்ளது. இதைக்கண்ட பேருந்து நிலைய வணிகர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அது ஒரு தலைமை காவலர் பதவியில் உள்ள காவலர்கள் அணியும் தொப்பி என்பது தெரியவந்தது. மேலும் தலைமை காவலர் ஒருவரின் பயன்படுத்திய தொப்பி தான் என்பதும், புதிய தொப்பி வாங்கியதால் இதை குப்பையில் போட்டுயிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

பயன்படுத்தி சேதமடைந்த தொப்பியாக இருந்தாலும் அதை ஒரு தலைமை காவலர் பதவியில் உள்ளாவர் பலரும் காணும் வகையில் குப்பையில் வீசியதும், அதுவும் அரசின் அசோக சின்ன முத்திரையுடன் வீசி சென்றதும் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய தேசிய இலச்சினை அவமானம் செய்யும் வகையில் இதுபோன்ற செயல்களில் சீருடை பணியாளர்கள் ஈடுபட கூடாது என்பதை உயர்மட்ட அதிகாரிகள் வலியுறுத்த வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO