திருச்சியில் மாணவர்களுக்கு தீண்டாமை கொடுமை - இரவில் மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருச்சியில்  மாணவர்களுக்கு தீண்டாமை கொடுமை - இரவில் மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருச்சி மாவட்டம்  உப்பிலியாபுரம் ஒன்றியம் நெட்டவேலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டியலின மாணவர்களை சீருடையிலும், மற்ற பிரிவினை சேர்ந்த மாணவர்கள் சாதராண உடைகளில் வரசொல்லி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தங்கராஜ் இன்று குறிப்பிட்டு சொல்லி உள்ளார். இதனால் பெற்றோர்கள் அவரிடம் சென்று கேட்டபொழுது வாக்குவாதம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். மேலும் பட்டியலின மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் கொலை மிரட்டல் விடுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பள்ளியில் பயிலும் பட்டியலின மாணவர்களுக்கு உணவு அளிப்பதிலும் பாகுபாடு தீண்டாமை கொடுமை நடைபெறுவதாக பெற்றோர்களும், மாணவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 20 நாட்களாக பள்ளியில் எந்த பாடங்களும் நடைபெறவில்லை. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 120 மாணவர்கள் பயில்வதாகவும், இதில் 20 மாணவர்கள் பட்டியலின மாணவர்கள் என தகவல் தெரிவித்துள்ளனர்.அங்கு பயிலும் மாணவிகளிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்டதாக  தமிழ் ஆசிரியர் மோகன்தாஸ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக இப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை லில்லி தன்னையும் இதிலும் விசாரணைக்கு அழைப்பர்கள் என்பதால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கிறார்கள். மேலும் தற்போது நடைபெறும் இந்த கொடுமையை தொடர்பாக காவல்துறை புகார் வாங்க மறுப்பதாகவும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO