விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் பறையடித்து ஆர்ப்பாட்டம்!!

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் பறையடித்து ஆர்ப்பாட்டம்!!

Advertisement

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் திருச்சி பாலக்கரை பகுதியில் பறையடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் 60 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், கடந்த குடியரசு தினவிழா அன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன், ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ராஜா, ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், தமிழ்ப்புலிகள் அமைப்பின் ரமணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement