திருச்சி மாநகராட்சியில் பதவியேற்க சைக்கிளில் வந்த கவுன்சிலர்

திருச்சி மாநகராட்சியில் பதவியேற்க சைக்கிளில் வந்த கவுன்சிலர்

 திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை 65 வார்டுகள் உள்ளன. இதில் 59 வார்டுகளை தி.மு.க கூட்டணியும், 3 வார்டுகளில் அ.தி.மு.க வும், ஒரு வார்டில் அ.ம.மு.க வும், இரண்டு வார்டில் சுயேட்சையும் வெற்றி பெற்றனர். 

வெற்றி பெற்ற அனைவரும் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 23 வது வார்டில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுரேஷ் வெற்றி பெற்றார். இன்று மாமன்ற உறுப்பினராக திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு பதவி ஏற்க சைக்கிளில் வந்தார் .அவருடன் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களும் சைக்கிள் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

வீட்டிலிருந்து மாநகராட்சிக்கு சைக்கிளில் வந்து பதவி ஏற்று மீண்டும் சைக்கிளிலேயே சென்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தற்போது உள்ள கவுன்சிலர்கள் அனைவரும் காரில் வந்து இறங்கிய நிலையில் இவர் சைக்கிளிலேயே மாநகராட்சி அலுவலகத்தில் வாயில் வரை வந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.co/nepIqeLanO