திருச்சி மாநகராட்சி பெண் துணை மேயர் யார்?

திருச்சி மாநகராட்சி பெண் துணை மேயர் யார்?

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளது .இதில் திமுக கூட்டணி 59 இடங்களை கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள இடங்களில் அதிமுக மூன்று இடங்களையும் சுயச்சை இரண்டு இடங்களையும் ஒரு அமமுக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் திருச்சி மாநகர மேயர் வேட்பாளராக அமைச்சர் கே.என்.நேருவின் நிழலாக இருக்கக்கூடிய அன்பழகனுக்கு என்று  உறுதியாகி விட்டது.

 துணை மேயர் வேட்பாளருக்கு போட்டாபோட்டி தொடர்கிறது. நேருவின் ஆதரவாளர்களுக்கு துணைமேயர் வழங்க கூடாது என்பதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஸ் மிகுந்த உறுதியான நிலையில் உள்ளார். தன்னுடைய ஆதரவாளர்கள் வரிசையில் 16 வது வார்டில் வெற்றி பெற்ற மதிவாணனுக்கு துணை மேயர் ஆவதற்கான வாய்ப்பு இல்லை என்றாகி விட்டது. அடுத்ததாக அதிமுக  முன்னாள் துணைமேயர் சீனிவாசனை தோற்கடித்த மண்டி சேகர் என்னும் ராஜ்சேகரருக்கு  வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியது .ஆனால் அவருக்கும் அந்த வாய்ப்பு இல்லை என்றும் தற்போது இறுதியாக அமைச்சர் மகேஸ் ஆதரவாளரான(33 வார்டு) பெண் கவுன்சிலர் திவ்யாவுக்கு அதிக வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டு வருகிறது.
 ஏனென்றால் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு வின் ஆதரவாளர்கள் இதில் (57 வார்டில் வெற்றி பெற்ற 4வது முறை கவுன்சிலர்)முத்துச்செல்வம் ஆரம்பம் முதலே பேசப்பட்ட நபர். ஆனால் நேருவின் நிழலாக இருக்கும் அன்பழகனுக்கு மேயர் வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டதால் அவர் அணியில் இருந்து வேறு ஒருவருக்கு வாய்ப்பு தரப்படாது என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. எப்படி இருந்தாலும் 33வது வார்டு 3 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முதல் முறை வெற்றி பெற்ற வெற்றி பெற்றார் வேட்பாளர் திவ்யாவுக்கு வாய்ப்புகள் அதிகம் என்று அமைச்சர் மகேஸ் அணி அடித்து சொல்கிறது. ஆனால் இவரை விட மூத்த மாமன்ற உறுப்பினர்கள் நேரு அணியிலேயே ஒரு சிலர் உள்ளனர். தற்போது கூடுதலாக துணை மேயர் வேட்பாளர் போட்டியில் 13 வது வார்டு மணிமேகலையும் இணைந்துள்ளார்.

மிக முக்கியமாக ஆரம்பம் முதல் மேயர் வேட்பாளராக பேசப்பட்ட (11வது வார்டில் வெற்றி பெற்றவர்)விஜயா ஜெயராஜ் தற்போது துணை மேயர் ஆவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் ஆனால் அவர் நேரு அணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 இதைவிட கூடுதல் தகவல் இவர்கள் இருவரும் சண்டை ஏற்றுக்கொள்வதால் முன்னாள் மாநகர மேயர் சுஜாதா காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போது போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
 அவருக்கான வாய்ப்பு கொடுக்க முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் வழியாக தமிழக முதல்வரிடம் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
போட்டா போட்டிகள் எதுவாக இருந்தாலும் இறுதியாக திருச்சி மாநகராட்சி துணை மேயர் பெண் என முடிவாகிவிட்டது அதுவும் அமைச்சர் மகேஸ் ஆதரவாளருகே என்று திமுக தலைமை தகவல் தெரிவித்துள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO