முடியும் தருவாயில் உய்யக்கொண்டான் கால்வாய் பூங்காக்கள் மற்றும் சீரமைப்பு பணிகள்

முடியும் தருவாயில் உய்யக்கொண்டான் கால்வாய் பூங்காக்கள் மற்றும் சீரமைப்பு பணிகள்

1000 ஆண்டுகள் பழமையான உய்யக்கொண்டான் கால்வாய் கரைப்பகுதிகள் சீரமைக்கும் பணி தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. திருச்சி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றது. கடந்த 2009 இல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் ரூ 17.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இதுமட்டுமின்றி இந்த திட்டத்தில் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு மக்கள் பயன்பாட்டிற்கான 3 பூங்காக்கள் அமைப்பதற்கான வேலைபாடுகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையை எட்டியுள்ளது. சென்ற ஆண்டே முடிவடைய வேண்டிய பணிகள் கொரோனா  ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. 

தற்போது மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பூங்காக்கள் கால்வாயின் இடதுபுற நீர்ப்பாசன தடத்தில் காற்றோட்ட வசதியுடன், நீரூற்றுகள், ஆம்தியேட்டர் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. 
200 பேர் பயன்படுத்தும் வகையில் இந்த பூங்காக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காக்களில் 430 கிரானைட் கல் பலகைககள் அமர்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. 

2.6 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நிலப்பரப்பு நடைபாதையோடு இடது கரையில் உள்ள சாலைகளை மறு சீரமைக்கப்படும்  பணிகள் செயல்பாட்டில் இருக்கின்றது. இயற்கை சூழலோடு ஒரு தோட்டத்தை போன்ற வெளிப்புற வேலைப்பாடுகள்   இயற்கையை ரசித்துக்கொண்டே நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக அமைப்பதோடு, மூன்று கிளை 
கல்வெட்டுகள் கால்வாயில் இருந்து வரும் நீர் பொருத்தமான இடங்களுக்கு செல்வதை உறுதி செய்கிறது. 

பராமரிப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களுக்கான அறைகளுடன் விரிவாக அலங்கரிக்கப்பட்ட நுழைவு வாயில்கள், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பயன்பாட்டிற்கு  கண்காணிப்பு கேமராக்கள்,  பூங்கா பராமரிப்பிற்கு நீர் வழங்க 7 போர்வெல்கள், 3 குடிநீர் அமைப்புகள், பூங்காக்கள் மற்றும் சாலை ஓரங்களில் லைட்டிங் பொருத்துதல் ஆகியவை பிற முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் கூறுகையில்... 80 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. கொரோனா ஊரடங்கால் சில தாமதங்கள் இருந்த போதிலும் மீண்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது கூடிய விரைவில் இது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve