தொழில் போட்டி காரணமாக பெண் ஒருவரை கொலை செய்த நபர் மற்றும் கத்தியை காட்டி பணம் புறித்த நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.
கடந்த 06:02:22-ந்தேதி அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புத்தூர் ஆபீசர்ஸ் காலனி சந்திப்பில் பெண் ஒருவர் தன் சகோதரியை தொழில்போட்டி காரணமாக கொலை செய்ததாக கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மதிரி நாகராஜ் வயது 33, த.பெராமன் என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் விசாரணையில் மேற்படி வழக்கின் குற்றவாளி எதிரி நாகராஜ் என்பவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வருகிறது.
கடந்த 09.02.22-ந்தேதி காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தஞ்சாவூர் ரோடு, பூக்கொல்லை பகுதி அருகில் நடத்து சென்ற ஒருவரிடம் சத்தியை காண்பித்து பணம் ரூ.2000மற்றும் ஒரு செல்போனை பறித்து சென்றதாக காந்திமார்க்கெட் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, வழக்கின் சம்மந்தப்பட்ட எதிரிகளான சஞ்சீவி, அபுதாகி, அஜ்மத்அலி ஆகியேர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வீசாரணையில் மேற்படி வழக்கின் குற்றவாளியான எதிரியான 1சஞ்சீவி 2)அபுநாகி 3)அஜ்மத்அலி மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
எனவே, மேற்படி எதிரிகள் 1)நாகராஜ் 2)சஞ்சீவி 3)அபுநாகின்ர் 4அஜ்மத்துபி ஆகியேர்கள் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என வீசாரணையில் தெரிய வருவதாலும், அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரசு மருத்துவமனை காவல் ஆய்வாளர் மற்றும் காந்திமார்க்கெட் குற்றப்பிரிவு ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் .G.கார்த்திகேயன், . மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள்.
அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி எதிரிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் மேற்படி எதிரி சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய...