பல்கலை. அளவிலான தடகள போட்டிகள்-தேசிய கல்லூரி மாணவிகள் சாதனை

பல்கலை. அளவிலான தடகள போட்டிகள்-தேசிய கல்லூரி மாணவிகள் சாதனை

பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான மாணவியர்க்கான 41 ஆவது தடகளப் போட்டிகள் திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய எட்டு மாவட்டங்களில் உள்ள 67 கல்லூரிகளில் பயிலும் 900ம் மேற்பட்ட மாணவியர் இத்தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டனர். திருச்சி பிஷப் ஹீபர் மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரிகள் இணைந்து நடத்திய இப்போட்டியில் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரி மாணவியர் 6 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களுடன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர். சிறந்த தடகள வீராங்கனையாகத் தேசியக் கல்லூரியைச் சார்ந்த அட்சயாஸ்ரீ தேர்ந்தெடுக்கப்பட்டார்

பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் எம்.செல்வம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். விழாவில் பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் ஜெ.பிரின்சி மெர்லின், பல்கலைக்கழக உடற்கல்வித்துறைத் தலைவர் மற்றும் விளையாட்டுச் செயலாளர் ஆர்.காளிதாசன், ஆண்கள் போட்டி ஒருங்கிணைப்பாளர் ஏ.பால்ராஜ், பெண்கள் போட்டி ஒருங்கிணைப்பாளரும் அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி பேராசிரியருமான ஐ.திரவிய கிளாடினா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision