ஆற்றுக்கரையில் மண்ணரிப்பு - நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு.

ஆற்றுக்கரையில் மண்ணரிப்பு - நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது திருச்சி முக்கொம்பு மேல்ணையிலிருந்து கொள்ளிடத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டுள்ளது காவிரியில் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த சிறுகாம்பூர் கரியமாணிக்கம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது. மணல் அரிப்பை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் நடைபெற்றுவருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் முன்னிலையில் நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் மணிவாசன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision