NIT கல்லூரியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர்  ஆய்வு

NIT கல்லூரியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர்  ஆய்வு

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை திருச்சியில் ஆய்வு மேற்கொள்கிறார். முதலில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

பின்னர் திருவெறும்பூர் பகுதியில் உள்ள என் ஐடி தேசிய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் தமிழக அரசு சார்பில் கோவிட் கேர் அறையை பயண்பாட்டிற்காக தனிமைபடுத்துதல் மற்றும் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் திறந்து வைத்து பின்னர் அரசு அதிகாரிகள் மற்றும் முன்களப் பணியாளர்களிடம் ஆலோசனை நடத்துகிறார்.

இதனை முன்னிட்டு விழா நடைபெறும் இடத்தை இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா பார்வையிட்டு கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். உடன் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட  காவல் கண்காணிப்பாளர்கள் இருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK