திருச்சி வெங்காய மண்டி 24 ஆம் தேதி முதல் மூடப்படுவதாக வெங்காய வியாபாரி சங்க செயலாளர் தங்கராஜ் அறிவிப்பு
திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள வெங்காய மண்டியில் வியாபாரிகளின் நிர்வாகக்குழு கூட்டம் இன்று (20.05.2021)நடைபெற்றது .இக்கூட்டத்தின் முடிவில் கோவிட் தொற்று இரண்டாவது அலை பரவலைத் தடுக்க தமிழக அரசுடன் ஒத்துழைக்க உள்ளோம். வருகிற 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வெங்காய மண்டி விடுமுறை விடுவது எனவும் வர்த்தகம் எதுவும் நடைபெறாது எனவும் இக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது .
மேலும் இதில் பணி செய்யக்கூடிய தொழிலாளர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் .நாளொன்றுக்கு 300 டன் வெங்காயம் திருச்சி வெங்காயம் மண்டிக்கு வருகிறது . ஒரு கோடி ரூபாய் வர்த்தகமும் தினமும் நடைபெறுகிறது . இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல் சமூக பரவலை தடுப்பதற்காக திருச்சி வெங்காயம் மண்டியை ஒரு வார காலத்திற்கு வியாபாரம் நடைபெறாமல் விடுமுறை விடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெங்காய மண்டி செயலாளர் தங்கராஜ் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கிலோ சின்ன வெங்காயம் 15 ரூபாயிலிருந்து 40 ரூபாய் வரையும், பெரிய வெங்காயம் 15 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரையும் கிலோ விற்பனை செய்யப்படுகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK