திருச்சி வெஸ்ட்ரி  மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை அமைத்து உதவிய  VDart நிறுவனம் 

திருச்சி  வெஸ்ட்ரி  மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை அமைத்து உதவிய  VDart நிறுவனம் 

திருச்சி புனித ஜான்ஸ் 
வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில்  சிறந்த ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்குவதற்கான உபகரணங்களை பெறுவதற்கான உதவியை பள்ளியின் முன்னாள் மாணவர் அமைப்பிடம்  (VEPSA)கோரியது பள்ளி நிர்வாகம். 
VEPSA அமைப்பு VDart நிறுவனத்திடம் இத்தேவை குறித்து  உதவிக்கேட்டப்போது 
VDart  நிறுவனம்  உதவுவதற்கு முன் வந்து ரூபாய் 1.5லட்சம் மதிப்பில் ஸ்மார்ட்  வகுப்பறையை வெஸ்ட்ரி பள்ளிக்கு வழங்கியுள்ளது.


ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கி வைப்பதற்கான நிகழ்வு இன்று நடைபெற்றது.
 இவ்விழாவில்  கலந்து கொண்டு ஸ்மார்ட் வகுப்பறையை     திருச்சி தஞ்சை திருமண்டலத்தின்  பேராயர்  சந்திரசேகர் பிஷப் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் VDart மேலாளர் சங்கரநாராயணன் கலந்து கொண்டார்.கோவிட் தொற்று தொடங்கிய காலத்திலிருந்து VDart நிறுவனம் பல்வேறு விதமான உதவிகளை பொதுமக்களுக்கும் கொரோனா தொற்றால் பாதித்த நோயாளிகளுக்கு, மருத்துவமனைகளுக்கும் பல உதவிகளை செய்து வருகிறது.

போக்குவரத்து தடைபட்ட காலத்தில்  மருத்துவமனைகளுக்கு வரும் பணியாளர்களுக்கான வாகனங்களை இலவசமாக கொடுத்து உதவியும் மேலும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களையும் தொடர்ந்து உதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn