திருச்சி மாவட்டம் சுத்தரத்தனேசுவரர் கோயிலில் முதலாம் பராந்தகசோழனின் கல்வெட்டுக் கண்டுபிடிப்பு

ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க. மணிவாசன், இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு செய்தார்கள்
அப்பொழுது கோயில் திருப்பணியின் பொழுது புதிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அக்கல்வெட்டுகளை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் படியெடுத்து ஆய்வு செய்யப்பட்டது. கல்வெட்டுகளில் திருவூற்றத்தூர் என்றழைக்கப்பட்ட ஊட்டத்தூரில் மொத்தம் 13 கல்வெட்டுகள் புதியதாக கண்டறியப்பட்டன. இவற்றில் 5 கல்வெட்டுகள் முழுமையானவை மற்ற 7 கல்வெட்டுகள் துண்டுக் கல்வெட்டுகளாகவும் உள்ளன.
துண்டுக் கல்வெட்டுகளில் முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரனின் மெய்க்கீர்த்திகளின் ஒரு பகுதி மட்டுமே இடம்பெற்றுள்ளன. முழுமையாக உள்ள 5 கல்வெட்டுகளில் 4 கல்வெட்டுகள் சோழர் காலத்தியவை மற்றொன்று பாண்டியர் காலத்தைச் சார்ந்தது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision