மோட்டார் வாகன விற்பனை வருடாந்திர அளவில் உயர்வு! மாதாந்திர அளவில் சரிவு!

மோட்டார் வாகன விற்பனை வருடாந்திர அளவில் உயர்வு! மாதாந்திர அளவில் சரிவு!

இந்தியாவின் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (படா) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது... இந்தியாவில் ஆட்டோ மொபைல் விற்பனை கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டு ஜூலையில் 10 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாதாந்திர அளவில் கடந்த ஜூன் மாதத்தில் ஒப்பீடு செய்யும்போது, விற்பனை 5 சதவிகிதம் குறைந்துள்ளது.

3 சக்கர (சரக்கு / வணிக) வாகனங்கள் விற்பனை ஜூலையில் 94 ஆயிரத்து 148 யூனிட்களாக இருந்ததாகவும். இது வருடாந்திர அடிப்படையில் இது 74 சதவிகிதமாகவும், மாதாந் திர ஒப்பீட்டில் இது 9 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச்சில் 86 ஆயிரத்து 857 யூனிட்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. அனைத்து ரக வாகனங்களும் இணைந்த மொத்த விற்பனை கடந்த ஜூலையில் 17 லட்சத்து 70 ஆயிரத்து 181 யூனிட்களாக இருந்தது. கடந்த ஆண்டு ஜூலையில் இது 16 லட்சத்து 9 ஆயிரத்து 217 யூனிட்களாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளது.

கார்கள் விற்பனை கடந்த ஆண்டு ஜூலையில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 55 என்ற எண்ணிக்கையில் இருந்து 2 லட்சத்து 84 ஆயிரத்து 64 யூனிட்களாக உயர்ந்தது எனவும், பைக் விற்பனை 11 லட்சத்து 35 ஆயிரத்து 566 யூனிட்களில் இருந்து 12 லட்சத்து 28 ஆயிரத்து 139 யூனிட்களாக உயர்ந்தகாவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வணிக வாகனங்கள் விற்பனை 71 ஆயிரத்து 619 யூனிட்களில் இருந்து 73 ஆயிரத்து 65 யூனிட்களாக உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision