திருச்சியில் புதிய டாஸ்மாக் கடை திறக்க தனி ஒருவனாக எதிர்ப்பு - போராட்டம்
திருச்சி சோமரசம்பேட்டை - அல்லித்துறை பாலம் அருகில் புதிதாக டாஸ்மாக் மதுபான கடையை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டாஸ்மாக் மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னதுரை காலை முதல் தண்ணீர் அருந்தா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
புதிதாக டாஸ்மாக் மதுபான கடை அமையும் பட்சத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலி தொழிலாளர்கள், இதர தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், இதனை கருத்தில் கொண்டு மதுபான கடை அமைக்க கூடாது என சின்னதுரை தலைமையில் விவசாயிகள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் புதிதாக டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க மாட்டோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமியும், திருச்சி மாவட்டத்திலும் புதிதாக எந்த ஒரு இடத்திலும் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க மாட்டோம் என உறுதி அளித்துவிட்டு, தற்போது சோமரசம்பேட்டை பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை திறக்க முயற்சிப்பது என்பது வெட்கக்கேடானது என விவசாயி சின்னதுரை குற்றம்சாட்டினார்.
கஞ்சா மற்றும் போதை பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாகி வேலைக்குச் செல்லாமல் ஆங்காங்கே விழுந்து கிடக்கும் அவல நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் எதிர்கால சந்ததியினர் மற்றும் கூலி தொழிலாளர்களை மதுவுக்கு அடிமையாக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு உள்ளது என்றும், இந்த மதுபான கடையை திறக்காமல் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடந்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision