காலை சிற்றுண்டி திட்ட உணவு விழிப்புணர்வு கூட்டம்

காலை சிற்றுண்டி திட்ட உணவு விழிப்புணர்வு கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஏற்கனவே நடைபெற்று வருகின்ற தமிழக முதலமைச்சரின் "காலை சிற்றுண்டி திட்டம்" மேலும் விரிவுபடுத்துவதற்கு ஏதுவாக எட்டு வட்டாரங்களில் மகளிர் சுய உதவிக் குழு மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட மகளிர் திட்டம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சித்தலைவர் M.பிரதீப்குமார் உத்தரவின்பேரில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு அறிவுறுத்தலின்படி தொட்டியம், முசிறி, லால்குடி, மருங்காபுரி, த.பேட்டை, மனப்பாறை, வையம்பட்டி மற்றும் மன்னச்சநல்லூர் ஆகிய வட்டாரங்களில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியருக்கு அனைத்து பள்ளிகளிலும்

வேலை நாட்களில் காலை வேளையில் சத்தாண சிற்றுண்டி வழங்கிட "தமிழக முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் ” வருங்காலங்களில் தொடங்கிட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு 312 பேருக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்களால் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியினை சிவசுப்பிரமணியன், மகளிர் திட்ட துணை இயக்குநர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் M.வடிவேல், செல்வராஜ், D.ரெங்கநாதன், K.சண்முகசுந்தரம், W.ஜஸ்டின்அமல்ராஜ், மற்றும் R.அன்புச்செல்வன் அவரவர் பணிபுரியும் வட்டாரங்களில் விழிப்புணர்வு வழங்கினார்கள்.

திருச்சிராப்பள்ளி பள்ளி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும் வழங்க வேண்டும் என்று மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு கேட்டுக்கொண்டார். மேலும் உணவு கலப்படம் தொடர்பான புகார்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். 

உணவு கலப்பட புகாருக்கு : 99 44 95 95 95 / 95 85 95 95 95. மாநில புகார் எண் : 94 44 04 23 22