சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில்கள்- தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில்கள்- தெற்கு ரயில்வே  அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் நான்கு நாட்களுக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல நினைக்கும் மக்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளியை முன்னிட்டு, ரயில் பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர் - நெல்லை இடையே இன்று (நவம்பர் 9) வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் மேலும் 4 நாட்களுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 8 வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.  அதன்படி எழும்பூரில் இருந்து நவம்பர் 10, 11, 13, 14 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.45 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் 06055 புறப்பட்டு, அதேநாள் மதியம் 2 மணிக்கு திருநெல்வேலியை அடையும். மறுமார்க்கமாக, திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 10, 11,13, 14 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.15 மணிக்கு எழும்பூரை வந்தடையும். தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். 

இந்த வந்தே பாரத் ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ஏற்கனவே சென்னை - நெல்லை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில், காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.50க்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கத்தில் எழும்பூரில் இருந்து 2.50 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு இரவு 10.40 மணிக் கு சென்றடைகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision