அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை - திருச்சியில் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் இன்று திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், புதியதாக அமைக்கப்பட்டு வரும் உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவில் 32 படுக்கைகள் அமைத்துள்ளதைப் பார்வையிட்டு, மேலும் இந்த வார்டில் அமையவுள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்து அலுவலர்களிடம் ஆலோசனை வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலர்..... தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். மார்ச் 17ம் தேதிக்கு பிறகு கொரோனா இறப்பு இல்லை. பொதுமக்கள் பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம், தடுப்பூசி அதிகம் செலுத்திக் கொண்டதால் நோய்எதிர்ப்பு அதிகரித்து உள்ளது. இருந்தாலும் கவனக் குறைவுடன் இருக்க வேண்டாம். மருத்துவமனைகளில் மருத்துவ கட்டமைப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறோம். அதேநேரம் தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
1. 21கோடி மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை, 43.45 லட்சம் பேரும் முதல் தவணைத் தடுப்பூசியும், 13 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும். வயதானவர்கள் மற்றும் கூட்டு நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்ர. வெளிநாடுகளில் குரங்கு அம்மை நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 21 நாட்கள் அலர்ட்டாக இருக்க வேண்டும் எனவும், ஏதேனும் உடலில் நோய் தொற்று இருந்தால் அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழகம் மற்றும் இந்தியாவில் இந்நோய் பதிவாகவில்லை. இந்நோய் குறித்த கண்காணிப்பு தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 100க்கு கீழ்தான் பதிவாகி வருகிறது. மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு விமான நிலையங்களில் குரங்கம்மை நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் வருகையை கண்காணிக்க பயோமெட்ரிக் முறை அனைத்து மருத்துவமனைகளும் செயல்படுத்தபட உள்ளது. மேலும் மருத்துவமனையில் மருத்துவர்கள் வராமல் இருந்தால் நோயாளிகளே புகார் செய்யலாம். அதேநேரம் தவறு செய்யும் மருத்துவர் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
செல்போனை வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்டர்நெட் அடிக்சன் மையம் திறக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர்களுக்கு ஆலோசனையும், சிகிச்சையும் வழங்கப்படும். குறைகள் பல இருந்தாலும் தனியார் மருத்துவமனையை காட்டிலும் அரசு மருத்துவமனையில் பல நிறைகள் உள்ளது. தவறு செய்யும் பட்சத்தில் சுட்டிக்காட்டினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களை தேடி மருத்துவ முகாமில் செவிலியர்கள் பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது.
அதேநேரம் 2400 செவிலியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், கொரோனாவில் பணியாற்றியவர்கள் எம்ஆர்பி மூலம் வரக்கூடிய செவிலியர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். தேவையின் அடிப்படையில் வருங்காலத்தில் செவிலியர்கள் பணியிடங்களை நிரப்ப எம்ஆர்பி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு பரிசீலனை நடந்து வருகிறது என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO