ஜூன் 1-இல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்
திருச்சி மாநகர காவல்நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத 197 இருசக்கர வாகனங்கள், ஒரு ஆறு சக்கர வாகனம், ஒரு நான்கு சக்கர வாகனம், இரண்டு மூன்று சக்கர வாகனங்கள் உட்பட 201 வாகனங்கள் பொது ஏலம் விடப்படவுள்ளது.
வருகின்ற 01.06.2022-ம்தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறுகிறது. ஏலம் எடுக்க விரும்புவோர் 29.05.2022 முதல் 31.05.2022-ம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம்.
மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான 01.06.2022-ம் தேதி காலை 8 மணி முதல் 10 மணிவரை தங்களது ஆதார் அட்டையுடன் ரூபாய் 5000 முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஏலம் எடுத்த உடன் சரக்கு மற்றும் சேவை வரி இருசக்கர வாகனத்திற்கு 12% மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18% முழு தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் நிச்சயமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO