ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை விவரம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை விவரம்

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், ஸ்ரீ பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு உள்ளூர் வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வருவார்கள். இந்த பக்தர்களின் காணிக்கை கோவில் உள்ள உண்டியல்களில் செலுத்தப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மாதம் இருமுறை எண்ணப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று (21.03.2024) மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் காணக்கிடப்பட்டத்தில் ரூபாய் 42 லட்சத்து 72 ஆயிரத்து 037 ரூபாய் ரொக்கம், 62 கிராம் தங்கம், 410 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு ரூபாய் தாள்கள் 204 எண்ணிக்கைகள் கிடைக்கப்பெற்றன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision